காசாவில் இனப்படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர், மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களைக் கொன்று இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்தியுள்ளதாக, சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த 17 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச நீதிமன்ற அமர்வு இடைக்கால தீர்ப்பு வழங்கியது.
அதில், இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே இதனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுக்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் காசாவில் இனப்படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தென்ஆப்பிரிக்கா விடுத்த கோரிக்கை குறித்து நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறானது என தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்களது தரப்பு நியாயத்தை ஏற்க மறுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
