Last Updated:
ஹமாஸ் வசம் உள்ள 48 பணயக் கைதிகளில் 20 பேர் உயிருடன் விடுவிக்கப்பட உள்ளனர்.
ஹமாஸ் வசம் உள்ள பணயக் கைதிகள் நாளை விடுவிக்கப்பட உள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக இஸ்ரேலில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
காசாவில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேறத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் நாளை விடுவிக்கப்பட உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு வசம் உள்ள 48 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டும் உயிருடன் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட உள்ளனர். இதேபோன்று, இஸ்ரேல் சிறையில் வாடும் 2 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அடுத்த கட்ட அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் உள்ளூர் நேரப்படி நாளை மதியம் நடைபெற உள்ளது. செங்கடல் பகுதியில் உள்ள ஷர்ம் எல் ஷேக் (Sharm el-Sheikh) நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதேநேரம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
October 12, 2025 9:56 AM IST
காசாவில் அமைதி திரும்புமா..? இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சைனையை தீர்க்க அடுத்தகட்ட மூவ் இதுதான்!