Last Updated:
இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் உட்புற ரத்தப்போக்கு ஆகியவை அடங்கும். இந்த நோய் ஏற்பட்ட பெரும்பாலான நோயாளிகள், அடுத்த 48 மணி நேரத்திற்குள் உயிரிழக்கின்றனர்.
காங்கோவில் பரவி வரும் மர்ம நோய் காரணமாக, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
மர்ம நோய்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) ஒரு மர்ம நோய் பரவி வருகிறது. இந்த நோயால் ஐந்து வாரங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது சுகாதார நிபுணர்களிடையே கவலையை தூண்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூறுகையில், பிப்ரவரி 16ம் தேதி நிலவரப்படி ஈக்வடேர் மாகாணத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் 431 வழக்குகள் பதிவான நிலையில், 53 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறிகள்
இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் உட்புற ரத்தப்போக்கு ஆகியவை அடங்கும். இந்த நோய் ஏற்பட்ட பெரும்பாலான நோயாளிகள், அடுத்த 48 மணி நேரத்திற்குள் உயிரிழக்கின்றனர். பிகோரோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் செர்ஜ் நாகலேபாடோ, அறிகுறிகளுக்கும் இறப்புக்கும் இடையிலான குறுகிய இடைவெளி ஆபத்தானது என்று குறிப்பிட்டார்.
பொது சுகாதார அச்சுறுத்தல்
கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வரும் இந்த தொற்று நோய், பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும், இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும் WHO செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில், WHO இது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த நோயின் சரியான தோற்றம் மற்றும் தன்மை இன்னும் தெரியவில்லை.
Also Read: காசாவை வாங்கியே தீருவேன்.. அடம்பிடிக்கும் டிரம்ப்.. புதிய AI வீடியோ வெளியிட்டு சர்ச்சை
இது மற்றொரு தொற்றுநோயா என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த ஜூனோடிக் நோய்கள், அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்ற தொற்றுநோய்கள் 60% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசைப் பொறுத்தவரை, பலவீனமான சுகாதார உள்கட்டமைப்பு மேலும் பரவுவதற்கான குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு உயர்மட்ட தலையீடு தேவைப்படுகிறது என்பதே உண்மை.
February 27, 2025 11:35 AM IST


