• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“காங்கிரஸ் மேடையில் என் தாயை அவமதித்துவிட்டார்கள்” – பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“காங்கிரஸ் மேடையில் என் தாயை அவமதித்துவிட்டார்கள்” – பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 02, 2025 3:15 PM IST

பிகார் பாஜக கூட்டத்தில் “என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பிகாரில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார்” என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

News18News18
News18

பிகார் பாஜகவினருடன் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பிகாரில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார். அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை. நாட்டில் உள்ள தாய்மார்களை, சகோதரிகளை இழிவுபடுத்தி உள்ளனர்” என பேசியுள்ளார்.

பிகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகார பயணத்தை’ மேற்கொண்டார். இந்தப் பயணம் நேற்றோடு (செப்டம்பர் 1ஆம் தேதி) முடிவடைந்தது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பிகார் மாநிலத்தின் தர்பங்காவில் பேரணி மேற்கொண்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வருவதற்கு முன்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையின் மீது ஏறிய சிலர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாய் ஆகியோர் குறித்து இழிவுபடுத்துவம் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜப்பான் மற்றும் சீன பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியாவுக்கு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, பிகார் பாஜக கூட்டத்தில் காணொளி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பிகாரில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார். அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை. நாட்டில் உள்ள தாய்மார்களை, சகோதரிகளை இழிவுபடுத்தி உள்ளனர்” என பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பேசியதைக் கேட்ட பாஜகவினர் கண்ணீர் சிந்தினர்.

பாஜக கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது; “ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தின்போது, எனது தாயை அவமதித்துவிட்டனர். இந்தியத் தாயை அவமதிப்பவர்களுக்கு என் அம்மாவை திட்டுவது ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

என் தாயை இழிவாக பேசியபோது என் இதயம் எந்த அளவிற்கு காயப்பட்டதோ அதைவிட பிகாரின் தாய்மார்கள் இதனால் மன வலியை சுமந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை நான் மன்னித்துவிடுவேன். ஆனால், பிகார் மக்கள் ஒரு போதும் எனது தாயை இழிவாக பேசியவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

பெண்களால் பிகாரில் ஆர்.ஜே.டி. ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனால் அவர்கள் பெண்களை பழிவாங்குகிறார்கள். அவர்களின் மன நிலையே பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என்பதுதான்.

#WATCH | Prime Minister Narendra Modi says, “The mindset that abuses the mother, the mindset that abuses the sister, considers women to be weak. This mindset considers women to be objects of exploitation and oppression. Therefore, whenever the anti-women mindset has come to… pic.twitter.com/YqYdK0O0cB


— ANI (@ANI) September 2, 2025

என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பிகாரில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார். அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை. நாட்டில் உள்ள தாய்மார்களை, சகோதரிகளை இழிவுபடுத்தி உள்ளனர்” என பேசியுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 02, 2025 3:15 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || “ICCPR யை பயன்படுத்தி பழிவாங்காதீர்”

Next Post

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், ஏரோட்ரெயின் சேவை மீண்டும் தொடங்கியது! | Makkal Osai

Next Post
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், ஏரோட்ரெயின் சேவை மீண்டும் தொடங்கியது! | Makkal Osai

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், ஏரோட்ரெயின் சேவை மீண்டும் தொடங்கியது! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin