காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த எம்.பி., வசந்தகுமாரின் சகோதரரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் செவ்வாய்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 93. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை செளந்தரராஜன் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

