• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“காங்கிரஸ் கட்சியால் இனி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது” – ஜே.பி.நட்டா | Congress party used to divide people and did vote bank politics says JP Nadda

GenevaTimes by GenevaTimes
April 12, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
“காங்கிரஸ் கட்சியால் இனி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது” – ஜே.பி.நட்டா | Congress party used to divide people and did vote bank politics says JP Nadda
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சித்தி: “முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது. ஆனால், தற்போது பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலின் வரையறையை மாற்றிவிட்டார்” என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், “முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது. அனைவரிடம் இருந்தும் வாக்குகளை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில சாதி, சமுதாயம் அல்லது பிரிவுகளுக்காக மட்டும் அரசாங்கத்தை அமைத்தது. காங்கிரஸ் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருக்கவில்லை.

ஆனால், தற்போது பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலின் வரையறையை மாற்றிவிட்டார். தற்போது மக்களை தவறாக வழிநடத்தி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது. சாதி மற்றும் வகுப்புவாத அரசியலை இனி செய்ய முடியாது. தற்போது நடைபெறும் அரசியல், வளர்ச்சிக்கான அரசியலாகும். நீங்கள் செய்த பணிகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். உங்கள் பணிகளின் அடிப்படையில்தான் மக்கள் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்வார்கள்” என்றார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக 28 இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post

கவாஸ்கரின் 1970 சாதனையை முறியடித்த இளம் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
கவாஸ்கரின் 1970 சாதனையை முறியடித்த இளம் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள் – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

கவாஸ்கரின் 1970 சாதனையை முறியடித்த இளம் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள் - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin