Last Updated:
காங்கிரஸூம், ராகுல் காந்தியும் பாஜகவின் பி-டீம் என்றும் தோல்வியில் இருந்து பாடம் கற்காதவர் ராகுல் என்றும் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியை பாஜகவின் பி-டீம் என்று குற்றஞ்சாட்டியுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தோல்வியில் இருந்து பாடம் கற்காதவர் ராகுல் என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கேரளாவில் பாஜகவிற்கு வாக்கு வங்கி உயர்ந்திருக்கலாம், ஆனால் ஒரு தொகுதியில் கூட வெல்லும் அளவுக்கு அவர்களுக்கு வலிமை இல்லை என்று தெரிவித்தார்.
சபரிமலை விவகாரம் இந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், வளர்ச்சியின் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் கூறினார்.
ராகுல் காந்தியின் அணுகுமுறை மீண்டும் மீண்டும் பாஜகவுக்கே சாதகமாக அமைவதாகவும், டெல்லி, ஹரியானா, பிகார் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அவர் சிதைத்ததே பாஜகவின் வளர்ச்சிக்குக் காரணம் என்றும் பினராயி விஜயன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸூம், ராகுல் காந்தியும் பாஜகவின் பி-டீம் என்றும் தோல்வியில் இருந்து பாடம் கற்காதவர் ராகுல் என்றும் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


