Last Updated:
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சன் சௌத்ரி, மம்தா நேரடியாக காங்கிரஸில் இணையலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து கட்சி இரண்டாக உடைந்து ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் ஒரு அணியும், மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு அணியும் என உருவானது. இரண்டு அணிகளும் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் உரிமை கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் இரண்டையும் முடக்கியது.
இதனைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி பிரிவுக்கு ‘கால்பந்து வீரர்’ சின்னத்தையும், ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரையும், எதிர் தரப்பான ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ எனும் பெயரையும், ‘கடித உறை’ சின்னத்தையும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை முடக்கப்பட்டு பெரும் சரிவை சந்தித்துள்ள மம்தாவுக்கு அம்மாநிலத்தில் நடைபெறும் இரண்டு தொகுதி இடைத் தேர்தல்களில் நந்திகிராம் வேட்பாளர் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்று மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால் வேறு வழியில்லாமல் காங்கிரஸ் வேட்பாளருக்கு மம்தா பானர்ஜி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மேற்கு வங்கம் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரஞ்சன் சௌத்ரி, “மம்தா பானர்ஜி நேரடியாகவே காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிடலாம்” என அழைப்பு விடுத்துள்ளார்.
#WATCH | Murshidabad, West Bengal | Senior Congress leader Adhir Ranjan Chowdhury says, “…I would like to offer a suggestion to Mamata Banerjee, and also urge our High Command, that she should simply join the Congress party directly. Instead of engaging in other manoeuvres, why… pic.twitter.com/wYKY783jG9
— ANI (@ANI) October 1, 2026
செய்தியாளர்கள் சந்திப்பில் ரஞ்சன் சௌத்ரி கூறியதாவது; “மம்தா பானர்ஜி, நேரடியாகவே காங்கிரஸ் கட்சியில் இணையலாம். வேறுவிதமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, அவருடன் எஞ்சியிருக்கும் அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் ஏன் இணையக்கூடாது?
மம்தா பானர்ஜிக்கு இதனை ஒரு யோசனையைத் தெரிவிப்பதோடு, எங்கள் கட்சித் தலைமைக்கும் இதனை நான் வலியுறுத்த விரும்புகிறேன். அவர் காங்கிரஸில் இணைந்து கட்சியின் தலைவர்களில் ஒருவராக மாறினால், அவரது தலைமையின் கீழ் அவருடன் இணைந்து போராட நாங்கள் தயாராக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.


