பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் முன்னாள் தலைவர் கேஷவ ராவ் காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூலை 3) இணைந்தார்.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முனீஷ், முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதற்கு முன்பு 2000ம் ஆண்டின் மத்தியில், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கேஷவ ராவ். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

