Last Updated:
பல்லிகள், பாம்புகள் மற்றும் சிறிய விலங்குகளை வேட்டையாடியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அர்ஜென்டினாவில் காகம் அளவில் உயிர் வாழ்ந்த டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பூமியில் சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் என்ற விலங்கு இருந்தது ஸ்டீவ் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் படம் எல்லோருக்கும் தெரியும் தகவலானது.
7 டன் எடை கொண்ட மாமிச உண்ணியான ஜிகனோடோசொரஸ் (Giganotosaurus), 70 டன் எடையுள்ள தாவர உண்ணியான அர்ஜென்டினோசொரஸ் (Argentinosaurus) ஆகியவை டைனோசர்களில் பிரமாண்டமானவை. இந்த விலங்குகள் எல்லாம் வாழ்ந்த அதே காலகட்டத்தில் தென்அமெரிக்காவில் காகம் அளவே உள்ள ஒரு டைனோசர் வாழ்ந்துள்ளது.

அர்ஜென்டினாவின் படகோனியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள், எலும்புகள் மூலம் இதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விலங்கிற்கு “அல்னா” என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளனர். இதன் எடை தோராயமாக வெறும் 700 கிராம் என்றால் ஆச்சரியம்தானே. அல்னாவுக்கு சக்திவாய்ந்த குட்டையான முன்கைகள் மற்றும் நீண்ட பின்னங்கால்கள் இருந்துள்ளன. இது பல்லிகள், பாம்புகள் மற்றும் சிறிய விலங்குகளை வேட்டையாடியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


