• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் : குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறை

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் : குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பில் உள்ள விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளைக் காவல்துறையினர் தாக்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது.

தற்போதைய போராட்டத்தில் பங்கேற்ற பிக்குகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து எந்த முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி 



இதற்கிடையில், தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், அங்கிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் : குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறை | Police Deny Allegations As Kassapa Thero Attacked



விகாரமகாதேவி பூங்காவில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றிரவு (17) கஸ்ஸப தேரர் அவசர சேவை நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


இந்த மோதலின் போது காவல்துறையினர் கஸ்ஸப தேரரைத் தாக்கியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்துள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்தல்



சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குவான கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்டு வரும் ‘சத்தியாக்கிரக’ போராட்டத்தின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் : குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறை | Police Deny Allegations As Kassapa Thero Attacked


ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்துவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை (16) அன்று விகாரமகாதேவி பூங்காவிற்கு இடம்பெயர்ந்தனர்.

இந்தநிலையில் மூன்றாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ள பௌத்த பிக்குகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

டொனால்ட் ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடும் ஐரோப்பாவின் பாதுகாப்பு நெருக்கடியும் – Sri Lanka Tamil News

Next Post

இந்த 6 பேங்கில் ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? வட்டி எகிறப் போகுது! RBI கொடுத்த அதிர்ச்சி! | Home Loan Interest Rates Hiked: SBI, PNB and 4 Other Banks Revise Rates

Next Post
இந்த 6 பேங்கில் ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? வட்டி எகிறப் போகுது! RBI கொடுத்த அதிர்ச்சி! | Home Loan Interest Rates Hiked: SBI, PNB and 4 Other Banks Revise Rates

இந்த 6 பேங்கில் ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? வட்டி எகிறப் போகுது! RBI கொடுத்த அதிர்ச்சி! | Home Loan Interest Rates Hiked: SBI, PNB and 4 Other Banks Revise Rates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin