எந்த ஒரு தெய்வத்தின் அருளை பெறுவதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தின் அருளை நாம் பெற வேண்டும். அப்பொழுதுதான் மற்ற தெய்வங்களின் அருளை நம்மால் பெற முடியும். அதனால்தான் நாம்40 செய்யக்கூடிய வழிபாட்டில் கூட முதலில் விநாயகப் பெருமானே வழிபாடு செய்து விட்டு அடுத்ததாக குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி செய்தால் தான் அந்த வழிபாட்டிற்குரிய முழுமையான பலனை நம்மால் பெற முடியும்.
மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கட்டங்களின் அடிப்படையில் கூட குலதெய்வ அருள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. அவற்றை சரி செய்தாலும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்கள் இருந்தாலும் குலதெய்வத்தை வசியம் செய்வதற்காக அனைவருக்கும் பொதுவான ஒரு சில பரிகாரங்கள் இருக்கும். அவற்றில் ஒரு பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
தினமும் குலதெய்வத்தின் அருள் கிடைப்பது என்பது சிறப்பு அல்லவா? அதனால் இந்த வழிபாட்டை அனுதினமும் செய்ய வேண்டும். இதற்காக புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு தாம்பாள தட்டின் மேல் வைக்க வேண்டும். பிறகு அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தின் பெயரை கூறி தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி தினமும் வீட்டில் விளக்கேற்றும் பொழுது இந்த அகல் விளக்கிலும் தீபம் ஏற்ற ஏற்ற குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் தீரும். இப்படி குலதெய்வத்தை நினைத்து தீபமேற்றி நாம் வழிபாடு செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளால் நம்முடைய வழிபாட்டிற்குரிய முழுமையான பலன் நமக்கு கிடைக்கும்.
ஆண் தெய்வமாக இருந்தாலும் பெண் தெய்வமாக இருந்தாலும் இந்த ஒரு தீபத்தை குலதெய்வத்தை நினைத்து ஏற்றி பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகுவதோடு
நல்ல முன்னேற்றத்தையும் பெறுவீர்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.




