Last Updated:
ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ளார். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட இவர், 50 வயதானவர். பாஜக மகளிரணி துணைத் தலைவராக பணியாற்றியவர்.
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ள ரேகா குப்தா ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் ஆவார்.
50 வயதான ரேகா குப்தா, அரியானா மாநிலத்தில் பிறந்தவர். மாணவப் பருவத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். 1996-97-இல் டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் ஆனார்.
வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 2007 இல் உள்ளாட்சி தேர்தலில் கால் பதித்து கவுன்சிலரானார். தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலராக பதவி வகித்த இவர், தெற்கு டெல்லியின் மேயராகவும் முத்திரை பதித்தார். பாஜக மகளிரணி துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது டெல்லி பாஜக பொதுச் செயலாளராக உள்ளார்.
இதையும் வாசிக்க: Rekha Gupta | 10 நாட்கள் இழுபறிக்கு பின் முடிவு.. டெல்லியின் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் 29 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். முதல் முறையாக எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் ஆளப்படும் மாநிலங்களில் பாஜக-வின் ஒரே பெண் முதலமைச்சர் ஆவார்.
இதன்மூலம் சுஸ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷியை தொடர்ந்து டெல்லியின் 4 ஆவது பெண் முதலமைச்சராகவும், டெல்லி பாஜகவின் இரண்டாவது பெண் முதலமைச்சராகவும் ரேகா குப்தா உருவெடுத்துள்ளார்.
February 20, 2025 7:08 AM IST


