• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள மருந்துகளை தடை செய்யக் கோரி வழக்கு

GenevaTimes by GenevaTimes
June 10, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள மருந்துகளை தடை செய்யக் கோரி வழக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளை சட்டவிரோதமாக விலங்குகளுக்கு செலுத்துவதாகவும், மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்தபிறகு, அவற்றின் மாமிசத்தை சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழப்பதால், நான்கு மாவட்டங்களிலும் மூன்று மருந்துகளையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த வன விலங்குகள் ஆர்வலர் சூர்யகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

விளம்பரம்

அதில், 1980ம் ஆண்டில் இந்தியாவில் நான்கு கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாகவும், இயற்கையின் சுகாதார பணியாளர்களான கழுகுகளை பாதுகாக்க, நான்கு மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில், கழுகுகளை பாதுகாக்க நாடு முழுவதும் 80 மையங்கள் அமைக்க உள்ளதாகவும், தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளை கழுகுகள் பாதுகாப்பு மையங்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்ட போதும், இதுவரை எந்த கருத்துருக்களையும் அனுப்பவில்லை எனவும், கழுகுகளுக்கு ஆபத்தாக உள்ள மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

தமிழக அரசுத்தரப்பில், கழுகுகளை பாதுகாக்க மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு, மத்திய அரசின் கழுகுகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 
பரந்தூர் விமான நிலையத்துக்காக மேலும் 147 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை

மேலும், மருந்துகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கழுகுகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கழுகுகள் இனப்பெருக்கத்துக்காக அடைகாத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

.

Read More

Previous Post

போட்டியில் தோற்றாலும் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய இங்கிலாந்து அணி வீரர்

Next Post

22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post
22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

22 வருடகால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா - Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin