சிங்கப்பூர்: ராஃபிள்ஸ் மருத்துவமனையின் பணிபுரியும் இந்திய செவிலியர் ஆடவர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.
ஆடவருக்கு தொற்று கிருமி நீக்கம் செய்வதாகக் கூறி மருத்துவமனையில் வைத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சோதனை… 4 ஊழியர்கள் கைது
இந்திய நாட்டை சேர்ந்த 34 வயதான எலிப் சிவா நாகு என்ற செவிலியர் குற்றம் நடந்த உடனே நர்சிங் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டடார்.
இதனை அடுத்து மானபங்க குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதால், நேற்று முன்தினம் (அக்.2) ஒரு வருடம் மற்றும் இரண்டு மாத சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படிகளும் அவருக்கு விதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட ஆடவர், கடந்த ஜூன் 18 அன்று நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாத்தாவைப் பார்க்கச் சென்றிருந்தார்.
அன்று இரவு 7.30 மணிவாக்கில், பாதிக்கப்பட்ட ஆடவர் நோயாளியின் கழிப்பறைக்குள் நுழைவதை எலிப் பார்த்தார்.
அவருக்கு தொற்று கிருமி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறிய எலிப், தனது கையில் சோப்பை தடவி ஆடவரிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த ஆடவர் செய்வதறியாது நின்றார், பின்னர் தனது தாத்தாவின் படுக்கைக்குத் திரும்பினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்து என்ன நடந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
சம்பவம் நடந்து இரு நாள்களுக்குப் பிறகு எலிப் கைது செய்யப்பட்டார்.

