Last Updated:
சுமோ மல்யுத்தத்துக்கு அணிவது போல் இவர்கள் ஆடை அணிந்திருந்தாலும் அதற்கேற்ற உடல் எடை தேவையில்லை.
ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ளது யோட்சுகைடோ. இங்கு 200 ஆண்டுகளுக்கு மேலாக வாராபி ஹட்கா மாட்சூரி என்ற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா என்றால் வாணவேடிக்கை, கொண்டாட்டம் இருக்கும் என்பதற்கு மாறாக இந்த விளையாட்டுக்கு சேறும், இடுப்பில் சிறு துணியும்தான் பிரதானம். வெயிலோடு விளையாடுவதை போல இப்படி சேற்றில் இவர்கள் விளையாடுவது கடவுளின் அருளுக்காகத்தான்.
சுமோ மல்யுத்தத்துக்கு அணிவது போல் இவர்கள் ஆடை அணிந்திருந்தாலும் அதற்கேற்ற உடல் எடை தேவையில்லை. ஏனென்றால் இவர்கள் விளையாடுவது கடவுளின் அன்புக்கும், அருளுக்கும்தான். மனித பிரமிடுகளை போல குழுக்களை உருவாக்கி சேற்றில் உருண்டு புரண்டு குழந்தைகள் போல் விளையாடினாலும் இதில் வெற்றியாளர் யாரும் கிடையாது. அறுவடை வேண்டியும், தங்களது குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும் போட்டியாளர்கள் பிரார்த்தனை செய்து கொண்டனர்.


