
கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில, தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத இருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தக் கைக்குண்டுத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

