அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் புதிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பின் போது குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கும் நோக்கில் ஒரு கலந்துரையாடல் நேற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றுள்ளது.
சீர்திருத்த அம்சங்கள்
இந்த நிகழ்வின் போது, முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு விளக்கியுள்ளார்.
அத்துடன், பாடத்திட்ட திருத்தங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் பரந்த கல்வி மாற்றத்தின் ஒரு பகுதியாக தொகுதிகள் மற்றும் செயல்பாடுகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |