Last Updated:
ராகுல் காந்தி பாஜக அரசு கல்வி நிதியை பாதியாக குறைத்ததாக விமர்சித்தார்.
நாடு முழுவதும் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களை விட கண்மூடித்தனமாக தங்களைப் பின்பற்றுபவர்களையே மத்திய அரசு ஊக்குவிப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் கூறினார். நாடு முழுவதும் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதில் 55 சதவீத பள்ளிகள் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் மூடப்பட்டுள்ளதாகவும் சாடினார்.
2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் கல்விக்கு 4 புள்ளி 6 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அது 2 புள்ளி 6 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார். நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி கேட்கும் மாணவர்களைக் கண்டு இந்த அரசு அஞ்சுவதாகவும் விமர்சித்தார்.


