கல்லாங்கில் விபத்தை ஏற்படுத்தி லாரி ஓட்டுநர் மாண்டதற்கு காரணம் என சந்தேகிக்கப்படும், 33 வயதுமிக்க ஆடவர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு, கிங் ஜார்ஜ் அவென்யூ மற்றும் லாவெண்டர் ஸ்ட்ரீட் சந்திப்பில் உள்ள கல்லாங்கில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக இன்று (ஆகஸ்ட் 26) காவல்துறை தெரிவித்துள்ளது.
லாரியுடன் தொடர்புடைய இந்த விபத்தில், போலீசார் வருவதற்கு முன்பே கார் ஓட்டுநர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியதாக சொல்லப்பட்டுள்ளது.
மாண்ட லாரி ஓட்டுநர் (57 வயது) மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் அவர் மரணித்ததாக காவல்துறை தெரிவித்தது.
அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) முன்னர் கூறியிருந்தது.
விசாரணைகள் தொடர்கின்றன.
Photo: Singapore Road Accident.com/Facebook

