கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ உருவாகி பல்வேறு இடங்களுக்கு பரவியது.
புகழ்பெற்ற யோசெமிட்டி தேசிய பூங்காவிற்கும் தீ பரவியதாக கூறப்படுகிறது.
வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.
நேற்று மற்றும் இன்று வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 1,000 ஹெக்டேர் நிலம் எரிந்துள்ளதாக கலிபோர்னியா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

