சின்னசாமி மைதானம்
அந்த அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களில் வெளிவந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாக, எங்கள் பங்கு மிகவும் குறைவாக இருந்தாலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய அந்தந்த பதவிகளுக்கு எங்கள் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கேற்க பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் முன்பு புதன்கிழமை மாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

