• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கர்நாடகாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்.. ரயில்வே மேம்பாலம் அருகே கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸால் பரபரப்பு

GenevaTimes by GenevaTimes
May 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கர்நாடகாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்.. ரயில்வே மேம்பாலம் அருகே கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸால் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 21, 2025 6:53 PM IST

கர்நாடகா சந்தபுரா ரயில்வே பாலம் அருகே சிறுமியின் உடல் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு. காவல்துறை தீவிர விசாரணை.

News18News18
News18

கர்நாடகா மாநிலம், சந்தபுரா எனும் இடத்தில் ரயில்வே பாலம் அருகே ஒரு சிறுமியின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு கிடந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள ஆனேகல் பகுதி அருகே அமைந்திருக்கும் சந்தபுரா எனும் இடத்தில் ரயில்வே பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் அருகே சென்ற சிலர் அங்கு ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டுள்ளனர். மேலும், அது சந்தேகத்திற்குரியதாகவும், அதில் இருந்து துர்நாற்றம் வந்ததாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை கைப்பற்றி பார்த்தபோது, அதில் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுத்துள்ளனர். இதனைக் கண்டதும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்தத் தகவல் அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கும் தெரியவந்ததும் அப்பகுதி முழுக்க பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனையடுத்து காவல்துறையினர், அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமி வேறு ஒரு இடத்தில் கொலை செய்து, பின் உடலை சூட்கேஸில் அடைத்து, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்திருக்கலாம் என இந்த மரணம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கொலையுண்ட சிறுமி, 10 முதல் 12 வயதிற்குள்ளானவராக இருக்கலாம். இறந்த சிறுமியின் பெயர், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், என அவர் தொடர்பான எந்த அடையாளமும் தற்போது வரை கிடைக்காததால் காவல்துறையினர் முதலில் இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், இந்த மரணம் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் விசாரணையில் தான் இந்த மரணம் எப்படி நடந்தது, மரணித்திருக்கும் சிறுமி யார், ஏன் கொலை செய்யப்பட்டார், எப்படி கொலை செய்யப்பட்டார், கொலை செய்தது யார் உள்ளிட்ட விஷயங்களுக்கு விடை கிடைக்கும்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கர்நாடகாவை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்.. ரயில்வே மேம்பாலம் அருகே கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸால் பரபரப்பு

Read More

Previous Post

Tamilmirror Online || சஞ்சீவ கொலை வழக்கு;விளக்கமறியல் நீடிப்பு

Next Post

ரிஷப் பந்தின் டீமை இன்று எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ்.. நேருக்கு நேர், உத்தேச பிளேயிங் லெவன் விவரம்

Next Post
ரிஷப் பந்தின் டீமை இன்று எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ்.. நேருக்கு நேர், உத்தேச பிளேயிங் லெவன் விவரம்

ரிஷப் பந்தின் டீமை இன்று எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ்.. நேருக்கு நேர், உத்தேச பிளேயிங் லெவன் விவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin