[ad_1]
Last Updated:
கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெறும் என டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பேசப்பட்டும் வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய அளவில் பாஜக வாக்குகளைத் திருடிவிட்டதாகவும், அதனாலே இரண்டிலும் வெற்றி பெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய ராகுல் காந்தி ஆதாரங்கள் என சிலவற்றையும் வெளியிட்டார். இந்த விவகாரம் நடந்துவரும் சூழலில், பிகார் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியை மேற்கொண்டது. இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இவற்றுக்கெல்லாம் முன்பே வாக்கு இயந்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை என்றும் மீண்டும் வாக்குச் சீட்டு முறையே கொண்டு வர வேண்டும் என்ற வாதமும் இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்போவதாக அம்மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதால் வாக்குச்சீட்டில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அது குறித்து தற்போது எதுவும் பேச முடியாது என்றும் டி.கே.சிவக்குமார் கூறினார்.
September 05, 2025 9:43 PM IST
“கர்நாடகாவில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும்” – துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்