Last Updated:
ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இந்த சம்பவத்தின் போது கோவாவை சேர்ந்த ஹர்ஷத் கான் என்பவரை போலீசார் விசாரணை செய்தனர்.
கர்நாடகாவில் போலி 500 ரூபாய் பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பணத்தை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கள்ள நோட்டு பிரச்சனை என்பது உலக அளவில் பொருளாதாரத்தை பாதித்து வரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே கள்ள நோட்டுகள் கைப்பற்றப்படுவது குறித்த தகவல்களை பார்க்க முடிகிறது.
இந்திய கரன்சிகள் போலியாக வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் அச்சடிக்கப்பட்டு எல்லை பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் புழக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசார் கட்டு கட்டாக 500 ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர். நூர்ஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து 500 ரூபாய் பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இந்த சம்பவத்தின் போது கோவாவை சேர்ந்த ஹர்ஷத் கான் என்பவரை போலீசார் விசாரணை செய்தனர். அவர் சுமார் ஒரு மாதம் கர்நாடகாவில் போலி பண கட்டுகளை அச்சடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பணக்கட்டுகளை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக “ரிவர்ஸ் வங்கி” என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. 500 ரூபாய் நோட்டுகள் அல்லது போலி ஐநூறு ரூபாய் நோட்டுகளில் எண் (Numbers) அச்சடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் பூஜ்ஜியம் என்ற ஒரே எண் மட்டும் பலமுறை இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போலியான 500 ரூபாய் கட்டுகள் சினிமா படப்பிடிப்பிற்காக அச்சடிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அந்த ரூபாய் நோட்டில் ஒரு ஓரமாக “சினிமா பயன்பாட்டிற்கு மட்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
April 09, 2025 3:45 PM IST
கர்நாடகாவில் கட்டுக் கட்டாக மீட்கப்பட்ட போலி ரூ. 500 நோட்டுகள்.. பறிமுதல் செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி


