• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து | Direct flights between India and China resume after Corona, Galwan issue

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து | Direct flights between India and China resume after Corona, Galwan issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க இரு நாடு​களும் முடி​வெடுத்​துள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்​தியா – சீனா இடையே 539 நேரடி விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. ஏர் இந்​தி​யா, இண்​டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்​டர்ன் விமானங்​கள் இயக்​கப்​பட்​டன.

அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரண​மாக இரு நாடு​களிடையே சர்​வ​தேச விமானப் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்​தி​யா​வின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் சீன வீரர்​கள் அத்​து​மீறி நுழைந்து கை கலப்​பில் ஈடு​பட்​டனர். இதனால் இரு நாடு​களுக்கு இடை​யில் மீண்​டும் சச்​சரவு ஏற்​பட்​டது. இதனால் இந்​தியா – சீனா நேரடி விமானப் போக்​கு​வரத்து நடை​பெற​வில்​லை.

இந்​நிலை​யில், சீனா, இந்​தி​யா​வுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதி​கபட்ச வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களும் அமெரிக்கா​வுக்கு பதிலடி கொடுக்க திட்​ட​மிட்​டுள்​ளன. சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யீ நேற்​று​முன்​தினம் பிரதமர் மோடியை டெல்​லி​யில் சந்​தித்து பேசி​னார். இதையடுத்து இந்​தியா – சீனா இடையே விரை​வில் நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் கூறும்​போது, “சீ​னா வைப் பொறுத்​தவரை​யில் நாளைக்கே விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​யும். ஆனால், இந்​திய விமானங்​களை சீனா​வுக்கு இயக்​கு​வதற்கு முன்​ன​தாக சில நடை​முறை​களை பூர்த்தி செய்ய வேண்டி உள்​ளது.

எனவே, இரு நாடு​களும் எப்​போது விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​யுமோ, அப்​போது தொடங்​கலாம் என்று முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. அதற்​காக நீண்ட நாட்​கள் எடுத்​துக் கொள்ள முடி​யாது. ஒரு மாதத்​துக்​குள் விமானங்​களை இயக்க நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும்” என்​றனர்.

இந்​தி​யா- சீனா இடையே விமான சேவை ஒப்​பந்​தம் (ஏஎஸ்ஏ) மாற்றி அமைக்க வேண்​டி​யுள்​ளது. இதுகுறித்து இரு நாடு​களும் ஆலோ​சனை நடத்த வேண்​டி​யுள்​ளது. அல்​லது தற்​போதுள்ள ஒப்​பந்​தத்​தைப் பின்​பற்​றியே விமானங்​களை இயக்​கலாமா என்று ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாடு சீனா​வின் டியான்​ஜின் நகரில் இந்த மாத இறு​தி​யில் நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்க சீனா செல்​கிறார். அப்​போது இரு நாடு​களிடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்​கு​வது குறித்த அறி​விப்பு வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.



Read More

Previous Post

யாழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை – ஐபிசி தமிழ்

Next Post

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ் | south africa spinner keshav maharaj tops icc odi bowlers ranking

Next Post
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ் | south africa spinner keshav maharaj tops icc odi bowlers ranking

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ் | south africa spinner keshav maharaj tops icc odi bowlers ranking

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin