• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பட்டுப்புழு… சிங்கப்பூரில் 16 வகை பூச்சிகளை உண்ண அனுமதி

GenevaTimes by GenevaTimes
July 10, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, பட்டுப்புழு… சிங்கப்பூரில் 16 வகை பூச்சிகளை உண்ண அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் குறிப்பிட்ட பூச்சிகளை உணவுகளாக உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்தந்த பூச்சிகளை உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வாழும் மக்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டினர். மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள்., அதாவது 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியா, ஜப்பான், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.

இதனால், அங்கு உள்ள உணவுப் பழக்க வழக்கங்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை அடிப்படையாக கொண்டு மாற்றம் கண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாய்லாந்து, சீனா, ஜப்பானில் அதிகம் உண்ணப்படும் 16 வகையான பூச்சிகளை சிங்கப்பூரில் உணவுகளாக விற்பனை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி தந்துள்ளது.

விளம்பரம்

பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாதும் உணவு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுமான கிரிக்கெட் பூச்சி, வெட்டுக்கிளி, பட்டுப்புழுக்கள் உள்ளிட்டவற்றை தாய்லாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் அனுமதி தந்துள்ளது. இது தொடர்பாக பல ஆண்டுகளாக பூச்சிப் பிரியர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2 ஆண்டு கால ஆலோசனைக்கு பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
ரஷ்யா – உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்… பிரதமர் மோடி !

விளம்பரம்

பண்ணைகளில் வளர்க்கும் பூச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காடுகளில் வளர்பவற்றை உணவாக்கக்கூடாது, பூச்சிகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த கிரிக்கெட்டு பூச்சிகள், வெட்டுக்கிளிகள், புழுக்கள், பெரும்பாலும் புரதச் சத்து நிறைந்தவை. இவற்றில் இரும்பு, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் உள்ளிட்ட ஏராளமான தாதுக்களும் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், புரத உணவுகளுக்கு மாற்றாக பூச்சி உணவுகளை ஊக்குவிப்பதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கட்டண சலுகைகளையும் பல உணவகங்கள் பல அறிவித்துள்ளன.

விளம்பரம்

இந்தியாவை பொறுத்தவரை குறிப்பாக தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் வரும் ஈசல் என்ற ஒரு வகை பூச்சியை மக்கள் பொறித்து உண்பது வழக்கம். இதே போல், நியோட்ரோபிகல் எனப்படும் மெக்சிகோவில் இருந்து படகோனியா வரையிலான பகுதிகளில் 725 வகையான பூச்சிகள் உண்ணப்படுகின்றன. குறிப்பாக எறும்பு பர்கர்கள், வறுத்த டரான்டுலாக்கள் உணவுகளில் புரட்சி செய்து வருகின்றன.

இதையும் படிக்க:
பிரதமர் மோடி குறித்து அதிருப்தி தெரிவித்த உக்ரைன் அதிபர்… காரணம் என்ன?!

தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய ஓரியண்டலில் பிராந்தியத்தில் 578 வகையாக பூச்சிகள் உண்ணப்படுகிறன்றன. இந்தோனேசியாவில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் போட்டு சமைத்த உணவு பலரின் விருப்பமாக உள்ளன. தாய்லாந்தில் தெருவுக்கு தெரு பூச்சி உணவுகள் கடைபோட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

விளம்பரம்

வெப்பமண்டல ஆப்பிரிக்காவான மத்திய மற்றும் தென்னாப்பிரிக்காவில் 470 வகைகளும் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் சீனாவை உள்ளடக்கிய பேலிஆர்க்டிக் பிராந்தியத்தில் 294 வகைகளும் உணவுகளாக உண்ணப்படுகின்றன. கானா நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது, இந்த பூச்சிகளே வரப்பிரசாதங்களாக பார்க்கப்படுகின்றன. ஐப்பானை பொறுத்தவரை வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் வெறும் பூச்சிகளால் செய்யப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் தீவுகளில் 101 வகைகளும் அமெரிக்கா மற்றும் கனடாவில் 95 வகையான பூச்சிகளும் உணவுகளோடு சேர்த்து உண்ணப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

.

Read More

Previous Post

கவுதம் கம்பீர் இதுவரை சாதித்தது என்ன? காத்திருக்கும் சவால் என்ன?

Next Post

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Waiter வேலை!!

Next Post
வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Waiter வேலை!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Waiter வேலை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin