கம்பஹாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிரிந்திவெல காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹன்வெல்ல வீதியில் உள்ள ஒரு
திரையரங்கில், காவல்துறையினர் திடீர் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த சோதனை நடவடிக்கை நேற்று (18-10-2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
துப்பாக்கிகள்
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும்
கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் மில்லத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருள்களில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு
கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர்
ரக துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 – போர் ரக துப்பாக்கி, 398
எண்ணிக்கையிலான 12 – போர் ரக தோட்டாக்கள், 278 எண்ணிக்கையிலான 16 – போர் ரக
தோட்டாக்கள், ரி – 32 ரக துப்பாக்கிக்கான 49 தோட்டாக்கள், அதே ரகத்தைச்
சேர்ந்த மேலும் 3 ஆயிரத்து 83 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள்
அடங்குகின்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

