அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஈரான் மீது தாக்குல் தொடுக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ரகசியமாக திட்டமிட்டது. அதற்கான தருணத்தறிக்காக கண்கொத்தி பாம்பாக இஸ்ரேலின் மொசாட் மற்றும் அந்நாட்டின் ஒற்றர்கள் காத்திருந்தனர்.
ஈரானை தங்களது வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் 35 ஆண்டுகளாக அந்நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டனர்.
இதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியின் உளவு அமைப்புகள் ஈரானுக்குள் இறங்கி ஸ்கெட்ச் போட்டுள்ளன. இதற்கு முன்பு பலமுறை சுற்றிவளைத்த போதும் கமேனியை அவர்களால் நெருங்க முடியுவில்லை.
இருந்த போதும் முந்தை திட்டங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட மொசாட் இம்முறை தாக்குதல் திட்டத்திற்கு பக்கா பிளான் போட்டது.
அற்கு ஏற்றார் போல் சனிக்கிழமை அன்று தலைநகர் டெஹ்ரானில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் கமெனி மற்றும் ராணுவ தளபதிகள் ஒன்று கூடினர். இதுதான் சரியான தருணம் என்று ஒற்றர்கள் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு தகவல் பறந்துள்ளது.
அவர்கள் க்ரீன் சிக்னல் கொடுத்ததும் டெஹ்ரான் மீது கூட்டுத் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை சொல்லி வைத்தது போன்று ஒரே நேரத்தில் மொசாட்டின் ‘சைபர்’ பிரிவு செயலிழக்கச் செய்தது.
இதனால் அமெரிக்கா, இஸ்ரேலின் போர் விமானங்கள் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல் ஈரான் ராணுவம் செய்வது அறியாமல் திகைத்துள்ளது.
30 விநாடிகளுக்குள் சீறிப் பாய்ந்த ஏவுகணைகள் கமேனியின் கோட்டையை தகர்த்தெறிந்தன. ‘பங்கர்-பஸ்டர்’ எனப்படும் தரைக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்கமும் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த துல்லிய தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரின் மகள், மருமகன், மருமகள், பேரக்குழந்தைகள் கொள்ளப்பட்டதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அத்துடன், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ மையங்கள் மற்றும் இஸ்ஃபஹான், கரஜ், கெர்மான்ஷா உள்ளிட்ட நகரங்களிலும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்துள்ளது.
ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் உட்பட 160-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நகரங்களில் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலை தொடர்ந்தது.
அத்துடன், அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், துபாய், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் மீதும் ஏவுகணைகளை வீசியது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம் உட்படபல நாடுகளில் உள்ள 14 ராணுவத் தளங்களை தாக்கியது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது.
துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அருகிலும் தாக்குதல் தொடுத்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பான புதிய வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
ஈரான் தனது தாக்குதலை தொடர்ந்தால் பதிலடி பயங்கரமாக இருக்கும் என்றும், இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதலை தீவிரப்படுத்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதேவேளையில் கமேனி உட்பட ராணுவ தளபதிகளை கொன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வரலாறு காணாத பதிலடி கொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.
குறிப்பாக, கமேனியை கொன்ற அமெரிக்காவுக்கு மரண அடி கொடுப்போம் எனவும், சிவப்புக் கோட்டை தாண்டிய அமெரிக்க உரிய விலை கொடுத்தே ஆக வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு விரைவில் உரிய தீர்வு காணுமா?
