• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? – ‘தக் லைஃப்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் | Supreme Court upholds Kamal Haasan right to screen Thug Life in Karnataka

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? – ‘தக் லைஃப்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் | Supreme Court upholds Kamal Haasan right to screen Thug Life in Karnataka
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் லைஃப்’ பட இசை வெளி​யீட்டு விழா​வில் கமல் பேசி​யதற்கு எதி​ராக க‌ர்​நாடகா உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி நாகபிரசன்​னா, ‘‘கமல்​ஹாசன் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் படத்தை திரை​யிட முடி​யாது”என்று கூறி, மன்​னிப்பு கேட்​கு​மாறு வலி​யுறுத்​தி​னார்.

இதற்கு எதி​ராக சமூக ஆர்​வலர் மகேஷ் ரெட்டி என்​பவர் உச்ச நீ​தி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நேற்று நீதிப​தி​கள் உஜ்ஜால் புயன், மன்​மோகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில், ‘‘கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை​யின் தடை, அரசி​யலமைப்​பில் குறிப்​பிட்​டுள்ள பேச்​சு, கருத்து சுதந்​திரத்தை பறிக்​கும் செயல். கன்னடஅமைப்​பினரின் மிரட்​டலுக்கு கர்​நாடக அரசு பணிந்​துள்​ளது”என வாதிடப்​பட்​டது.

நீதிபதி மன்​மோகன், ‘‘நாடு முழு​வதும் தக் லைஃப் படத்தை வெளி​யிட மத்​திய திரைப்​படச் சான்​றிதழ் வாரி​யத்​தின் சான்​றிதழ் போது​மானது. அதைப் பெற்ற படத்தை திரை​யிடு​வதை யாராலும் தடுக்க முடி​யாது. குறிப்​பிட்ட கும்​பலோ, அமைப்​பினரோ சட்​டத்தை மீறு​வதை அனு​ம​திக்க முடி​யாது. திரையரங்கை கொளுத்​து​வோம் என கன்னட அமைப்​பினர் எச்​சரித்​தால், சட்​டம் ஒழுங்குக்கு பொறுப்​பான கர்​நாடக அரசு எப்​படி அமை​தி​யாக இருக்க முடி​யும்?

ஒரு கும்​பல் திரையரங்​கையோ, தெரு​வையோ கட்​டுப்​பாட்​டில் வைத்​திருப்​பதை அனு​ம​திக்க முடி​யாது. சட்​டத்​தின் ஆட்​சியை மீறு​வதை, கர்​நாடக அரசு எவ்​வாறு அனு​ம​திக்​கிறது? கர்​நாட​கா​வில் அனை​வரும் தக் லைஃப் படத்தை பார்க்க வேண்​டுமென ஆணை பிறப்​பிக்க முடி​யாது. ஆனால், நிச்​சய​மாக அந்​தப்படம் கர்​நாட​கா​வில் திரை​யிடப்பட வேண்​டும் என ஆணை பிறப்​பிக்க முடி​யும். கமல்​ஹாசன் கருத்​துக்கு மாற்று கருத்து தெரிவிக்​கலாம். பெங்​களூரு​வில் உள்ள அறி​வுஜீவி​கள் கூட்​டறிக்கை வெளி​யிடலாம். அதனை விடுத்து திரையரங்கை கொளுத்​து​வோம் என்​பதை ஏற்க முடி​யாது.

கமல்​ஹாசன் மன்​னிப்பு கேட்க வேண்​டுமென கர்​நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது​தான் நீதிப​தி​யின் பணி​யா? இந்த வழக்​கில் கர்​நாடக அரசு ஏன் இன்​னும் பதில் மனு தாக்​கல் செய்​யாமல் இருக்​கிறது? ஜூன் 18-ம் தேதி (இன்​று) பதில் தாக்​கல் செய்ய வேண்​டும். மறு​நாள் (ஜூன் 19) நாங்​கள் இந்த வழக்கை மீண்​டும் விசா​ரிக்​கிறோம்​”என்​றார்​.

கர்நாடகாவில் திரையிடப்படும்: கர்​நாடக துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் கூறும்​போது, “உச்​சநீ​தி​மன்​றத் தீர்ப்பை ஏற்​கிறோம். எல்​லா​வற்​றுக்​கும் எல்லை இருக்​கிறது. கன்னட அமைப்​பினர் அதை புரிந்து நடக்க வேண்​டும். சட்​டத்தை யாரும் கையிலெடுப்​பதை அனு​ம​திக்க முடி​யாது. கர்​நாட​கா​வில் அமைதி நிலை​நாட்​டக் கடமைப்​பட்​டிருக்​கிறோம். நாங்​கள் கன்னட அமைப்​பினருக்கு சுதந்​திரம் அளித்​திருந்​தா​லும், உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்​டிய நிலை​யில் இருக்​கிறோம். எனவே தக் லைஃப் திரைப்​படம் கர்​நாட​கா​வில் விரை​வில் திரை​யிட அனு​ம​திக்​கப்​படும்​”என்​றார்​.



Read More

Previous Post

அமெரிக்காவின் முடிவில் ஈரானுக்கு அழிவு: இஸ்ரேலுக்கு காத்திருக்கும் வாய்ப்பு!

Next Post

“தெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனே வெளியேறுங்கள்..” அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Next Post
“தெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனே வெளியேறுங்கள்..” அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

“தெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனே வெளியேறுங்கள்..” அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin