• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரிஷி சுனக் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 5, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரிஷி சுனக் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், இடதுசாரியான தொழிலாளர் கட்சி 410 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 இடங்களில் வென்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 411 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. மற்றொரு முக்கிய கட்சியான லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 71 இடங்களில் வென்றுள்ளது. பிரிட்டனில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தொழிலாளர் கட்சி 411 இடங்களை கைப்பற்றி உள்ளதால், புதிய பிரதமராக அக்கட்சியை சேர்ந்த Keir Starmer தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

விளம்பரம்

இந்நிலையில், தோல்விக்குப் பொறுப்பேற்று கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். விரைவில் மன்னர் சார்லசை சந்தித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் இங்கிலாந்து வாழ் தமிழரான உமா குமரன் வெற்றி பெற்று எம்.பி.,யாகி உள்ளார். லண்டனில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 44 சதவீத வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் வேட்பாளரை வீழ்த்தி உள்ளார்.

விளம்பரம்

இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் தமிழர் என்ற சாதனையை படைத்துள்ளார் உமா குமரன். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 8 தமிழர்கள் போட்டியிட்ட நிலையில், கவின் கரன், மயூரா செந்தில், தேவின்னா பால், நார்னி ரதர்ஃபோர்ட் ராஜன் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

.

Read More

Previous Post

சேப்பாக்கத்தில் முதல் டி 20 போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இன்று மோதல் | First T20I: India Women vs South Africa Women

Next Post

சுகாதார ஊழியர்கள் வெளியூர் வேலைக்கு செல்வது கவலை அளிக்கிறது – Malaysiakini

Next Post
சுகாதார ஊழியர்கள் வெளியூர் வேலைக்கு செல்வது கவலை அளிக்கிறது – Malaysiakini

சுகாதார ஊழியர்கள் வெளியூர் வேலைக்கு செல்வது கவலை அளிக்கிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin