
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தர்ஷன், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து தும்பா படத்தில் கதாநாயகனாக நடித்த அவர் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்க பிளே ஸ்மித் நிறுவனமும் சவுத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக மலையாள நடிகை அர்ஷா பைஜு நடிக்கிறார்.
மேலும், காளி வெங்கட், வினோதினி, தீனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

