• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘கனவு’ காருக்கு வந்த சோதனை; வாங்கிய மறுநாளே சிக்கல்! நடந்தது என்ன? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘கனவு’ காருக்கு வந்த சோதனை; வாங்கிய மறுநாளே சிக்கல்! நடந்தது என்ன? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 24, 2025 9:59 PM IST

Spinny தளத்தில் பெங்களூரு பயனர் ஹூண்டாய் i10 நியோஸ் (2021) கார் வாங்கி, ஸ்டீயரிங் பழுதால் ஏமாற்றம் அடைந்தார்; சமூக ஊடகங்களில் அனுபவம் வைரலாகியது.

மாதிரி படம்
மாதிரி படம்

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஆனால் அந்த கனவை ஒரு சிலரால் மட்டுமே நிறைவேற்ற முடிகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், புதிய கார் வாங்கிய ஒரு நாளிலேயே காரின் ஸ்டீயரிங் செயலிழந்து  ஓட்டுவது பாதுகாப்பற்றதாக மாறியதால், அவரது கனவு பாதியிலேயே கலைந்து போனது.

இதுகுறித்து அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது வைரலாகியுள்ளது. Spinny  தளத்தின் வழியாக ஹூண்டாய் i10 நியோஸ் (2021) காரை வாங்கிய அந்த பயனர், பயன்படுத்தப்பட்ட கார் தளங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் “தயவுசெய்து ஸ்பின்னியிடமிருந்து வாங்காதீர்கள். நான் இதைச் சொல்வது உங்கள் கனவைப் பாதுகாக்கத்தான் நான் இதைச் சொல்கிறேன்” என்று தலைப்பிட்டு உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார். சமீபத்தில் பெங்களூரில் உள்ள வேகா சிட்டி மையத்திலிருந்து “ஸ்பின்னி சான்றளிக்கப்பட்ட” ஹூண்டாய் i10 நியோஸ் (2021) காரை வாங்கிய அவர், டெலிவரி செய்யப்பட்ட ஒரு நாளிலேயே காரின் ஸ்டீயரிங் பிரச்சனையை ஏற்படுத்தியதாக கூறுகிறார்.

உண்மையில் என்ன நடந்தது?

“அருமையான புகைப்படங்கள்; மென்மையான பேச்சு மற்றும் ‘200+ ஆய்வு புள்ளி’ வாக்குறுதிகள் என அனைத்தும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் அடுத்த நாளே  ஸ்டீயரிங் (EPS மோட்டார்) பழுதடைந்தது” என ரெடிட் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். “பணத்தைத் திரும்ப தருவதாக நிறுவனம் ஒப்புக்கொண்டாலும், இது தீர்வாகாது. ஏனெனில் நீங்கள் வாங்கிய புதிய கார் அடுத்த நாளே பழுதடைவதைப் பார்ப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை திரும்ப கிடைக்கும் பணம் ஈடுசெய்யாது” எனப் பதிவர் கூறுகிறார்.

“யாரையும் வெறுக்கவோ அல்லது அவதூறு செய்யவோ நான் இதைச் செய்யவில்லை. என்னைப் போன்ற பலர் தங்கள் முதல் காரை வாங்க பல ஆண்டுகளாகச் பணத்தைச் சேமிப்பதால் இதைச் சொல்கிறேன். ஸ்டீயரிங் குறைபாட்டுடன் ஒரு காரை விற்று அதை “சான்றளிக்கப்பட்டது” என்று அழைக்கும் ஒரு நிறுவனத்தை, மக்களின் பாதுகாப்பு மற்றும் உணர்ச்சிகளுடன் விளையாட அனுமதிக்கக்கூடாது. தயவுசெய்து, ஸ்பின்னியிடமிருந்து கார் வாங்குவதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் முழுமையான சோதனையை மேற்கொள்ளுங்கள்” என்றும் அவர் கூறினார்.

சமூக ஊடகங்களின் எதிர்வினை:

இணையத்தில் இந்தப் பதிவு வைரலாகிய நிலையில், இதே போன்று தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பலர் பகிர்ந்து கொண்டனர். இது நெட்டிசன்களிடையே ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றது. “இதை முன்கூட்டியே சொன்னதற்கு நன்றி. ஸ்பின்னி அல்லது கார்ஸ்24 இரண்டுமே நம்பகமானவை அல்ல. பயன்படுத்திய காரை வாங்குவது இப்போது ஒரு சூதாட்டம் போல் தோன்றுகிறது” என்று ஒரு யூசர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

“2021-ல் எனது i20 N லைனை விற்க முயற்சித்தேன்; அது அதிக  தூரம் ஓட்டப்படவில்லை. 2025-ல் 7கி.மீ-க்கும் குறைவாகவே இயக்கப்பட்டது, இதற்கு அவர்கள் 5.6 லட்சம் என்ற குறைவான விலையை கூறினர். மேலும் இந்த விலையை ஏற்றுக்கொள்ளுமாறு என்னை நிர்பந்திக்க தொடங்கினர். இனிமேல் ஒருபோதும் நான் ஸ்பின்னியிடம் கார் வாங்கவோ விற்கவோ மாட்டேன்” என்று இன்னொரு பதிவர் தனது கோபத்தை பதிவு செய்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 24, 2025 9:59 PM IST

Read More

Previous Post

எங்கே நோக்கி போகிறது இலங்கை

Next Post

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸி அணி அறிவிப்பு | australia squad announced for t20i series with team india

Next Post
இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸி அணி அறிவிப்பு | australia squad announced for t20i series with team india

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸி அணி அறிவிப்பு | australia squad announced for t20i series with team india

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin