சிங்கப்பூரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சிலேத்தர் விரைவுச்சாலையில் (SLE) மரம் ஒன்று கீழ் விழுந்ததில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சிக்கி விபத்து ஏற்பட்டது.
இணையத்தில் பரவிய இந்த விபத்து குறித்த காணொளியில் என்ன நடந்தது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சோதனை… 4 ஊழியர்கள் கைது
திருச்சி – சிங்கப்பூர் இடையே வாரம்தோறும் கூடுதலாக 4 விமான சேவைகள் – இண்டிகோ அறிவிப்பு
இந்த சம்பவம் நேற்று (அக்டோபர் 24) இரவு 10:08 மணியளவில் SLE வழியாக செல்லும் லென்டார் அவென்யூ வெளியேறுவதற்கு முன்பு நடந்தது.
சாலையில் திடீரென விழுந்த மரத்தில் இரு மோட்டர் சைக்கிள் ஓட்டுனர்கள் மோதி கட்டுப்பாட்டை இழந்தனர்.
அந்த இரண்டு பேரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF செய்தித் தொடர்பாளர் கூறினார்.

