கனடாவின் பல்வேறு விமான நிலையங்களில் நேற்று வெடி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, பெருமளவான விமானங்கள், தாமதமாகவே சேவையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா, மொன்றியல், எட்மொன்டன், வின்னிபேக், கல்காரி மற்றும் வான்கூவர் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக கனேடிய தகவல்கள் கூறுகின்றன.
குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பிலான பின்னணி குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. (a)