Last Updated:
கனடா தேர்தல் 2025: 2015ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கனடா நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரே ஆகியோர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் லிபரல் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
2015ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, லிபரல் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், கனடா மத்திய வங்கி முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 24வது பிரதமராகப் பதவி ஏற்ற நிலையில் அக்டோபர் மாதம் வரை கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருக்கிறது. இருப்பினும், தேர்தல் நடத்தத் திட்டமிட்டு கார்னி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 28ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
Also Read: ஐரோப்பிய நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த மெகா பவர் கட்.. 2 கோடி பேர் வரை பாதிப்பு
இதில் லிபரல் கட்சி சார்பில் மார்க் கார்னியும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பியர் பொய்லிவ்ரே உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மொத்தம் 343 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் 172 இடங்களில் வெற்றி வாகை சூடுபவர்கள் ஆட்சி அமைப்பார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 29, 2025 11:44 AM IST


