கனடாவில் 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் இடம்பெற்ற நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் படி லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய தேர்தலின் தற்போதைய நிலவரப்படி, 52.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் 372,092 வாக்குகளை பெற்று லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளது.
அதேவேளை, கன்சர்வேடிவ் கட்சி 40.4 சதவீத வாக்கு வித்தியாசத்தில் 298,639 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
ட்ரூடோ பதவி விலகல்
கனடாவின் முன்னாள் பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 6 ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்தார்.
உள்நாட்டு பிரச்சினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து கனடா மீதான வரி உயர்வு ஆகியவற்றின் காரணமாக ட்ரூடோ பதவி விலகல் செய்தார்
அதனை தொடர்ந்து, லிபரல் கட்சிக்கு புதிய தலைவராக மார்க் கார்னி பொறுப்பேற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார்.
லிபரல் கட்சி முன்னிலை
லிபரல் கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் மார்க் கார்னி மாதம் தேர்தலை அறிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, லிபரல் கட்சிக்கு 152 ஆசனங்களும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 120 ஆசனங்களும் இருந்தன.
கனடாவில் தேர்தல் நடைபெற்று வருகிறது, கனடாவில் வாக்களிக்க தகுதியுடைய 28 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் ரைடிங்ஸ் என்றும் அழைக்கப்படும் 343 தனிப்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் படி லிபரல் கட்சி முன்னிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

