டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது.
ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த நிலையில், டெக்ஸாஸ் நகரில் நேற்று நடைபெற்ற தொடக்க போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்னீத் தலிவால் 61 ரன்களும், நிகோலஸ் கிர்டான் (nicholas kirton) 51 ரன்களும், ஸ்ரேயாஸ் மோவ்வா(shreyas movva) 32 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.
195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவன் டெய்லர், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மோனங்க் படேல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ், அவருடன் கைகோர்த்த ஆண்ட்ரியேஸ் கவுஸ் (andries Gous) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆண்ட்ரியேஸ் கவுஸ் 46 பந்துகளில் 65 ரன் எடுத்து ஆட்டமிழ்ந்தார். ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ரன்களும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து அமெரிக்கா வெற்றியை தன் வசப்படுத்தியது.
கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படாத அமெரிக்க அணி, தனது அதிரடியான பேட்டிங்கால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)