கனடாவில் 4 குழந்தைகள் உட்பட 6 இலங்கையர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்ஷனி பண்டாரநாயக்க / ஏகநாயக்க (மனைவி – 35 வயது)
இனுக்கா விக்கிரமசிங்க (மகன் 7 வயது)
அஷ்வினி விக்கிரமசிங்க (மகள் 4 வயது)
றினாயனா விக்கிரமசிங்க (மகள் 2 வயது)
கெலி விக்கிரமசிங்க (மகள் 2 மாதம்)
ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், கணவன் தனுஷ்க விக்கிரமசிங்க (மதுரங்க) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது.
இதேவேளை, குடும்ப நண்பரான 40 வயதுடைய காமினி என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார்.
19 வயதான ஃபெப்ரியோ டி-சொய்சா (Febrio De-Soyza), முதல் தரத்தில் கொலை செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளார்.
அவர் கனடாவில் மாணவராக இருந்ததாக நம்பப்படும் இலங்கைப் பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கைதுசெய்யப்பட்டார்.
நான்கு குழந்தைகள் உட்பட ஆறு பேர் புதன்கிழமை இரவு பார்ஹேவனில் (Barrhaven, Ottawa) உள்ள பெரிகன் டிரைவில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்ததை ஒட்டாவா பொலிஸார் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர்.
புதன் இரவு 11 மணிக்கு (March 06, 2024) 911 அழைப்புகளுக்கு பதிலளித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்குடும்பம் வெவ்வேறு காலங்களில் கனடாவுக்கு வந்தவர்கள் எனவும் கடைக் குழந்தை கனடாவில் பிறந்தவரெனவும் தெரியவருகிறது.
சம்பவம் நடைபெற்ற வீடு இக்குடும்பத்திற்குச் சொந்தமானதெனவும் 2013 இலிருந்து இவ்வீடு அவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறதெனவும் வீட்டு பதிவுகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். “பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று பொலிஸார் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் இலங்கை பிரஜைகளின் குடும்பம் என்று ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வீட்டு பேஸ்ட்மென்டில் வாடகைக்கு குடியிருந்த சிங்கள இளையராலேயே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவருகின்றது.
கனடாவின் அல்கோனிகின் கல்லூரியின் (Algonquin College) மாணவரே இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் இவர் கல்லூரிக்கு சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|