கனடாவில் விமல் பரம் எழுதிய “தீதும் நன்றும்” சிறுகதைத் தொகுதி அறிமுகம்
ஈழத்து எழுத்தாளர் விமல் பரம் எழுதிய தீதும் நன்றும் சிறுகதைத்தொகுதி வெளியீடு கனடா ரொறொன்ரோ மாநகரில் கடந்த வாரம் சிறப்புற நடைபெற்றது.
அரங்கு நிறைந்த மக்கள் மத்தியில் இந்நூல் வெளியீடு இடம்பெற்றது.
ஈழத்தில் உள்ள ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட இந்த நூல் போருக்குப் பிந்தைய மக்களின் நிலை, கிளிநொச்சி மக்களின் வாழ்வியல் பண்பாடு, பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எனப் பல்வேறு விடயங்களைப் பேசுகின்றது.
விரிவுரையாளர் பொன்னையா விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் ஆசிரியர் கோணேஸ் திசரூபன், ஈழத்து இயக்குநர் ரஞ்சித் ஜோசப், ஊடகவியலாளர் பிரியா வின்சென்ட் போன்றோர் உரைற்றியமை குறிப்பிடத்தக்கது.










செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

