• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கனடாவில் வாழும் சீக்கியர்கள் அனைவருமே காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல: ட்ரூடோ விளக்கம் | Not all Sikhs in Canada are Khalistan supporters: Trudeau

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in உலகம்
Reading Time: 7 mins read
0
கனடாவில் வாழும் சீக்கியர்கள் அனைவருமே காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல: ட்ரூடோ விளக்கம் | Not all Sikhs in Canada are Khalistan supporters: Trudeau
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒட்டவா: கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல என்றும், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதேபோல், கனடாவில் பிரதமர் மோடியின் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் கனடாவில் உள்ள அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டுள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசு நிறுவனங்களுக்கு “சாத்தியமான” தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது.

ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுகளை “அபத்தமானது” என்று இந்தியா நிராகரித்தது. மேலும், கனடா அரசால் குறிவைக்கப்பட்ட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டது. அதோடு, இந்தியாவில் உள்ள 6 கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. கனேடிய மண்ணில் இருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு சக்திகளுக்கு கனடா இடம் கொடுப்பதுதான் இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கியப் பிரச்சினை என்று இந்தியா கூறி வருகிறது.

கடந்த வாரம், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை ட்ரூடோ கண்டித்தார். ஒவ்வொரு கனடியரும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு என அவர் கூறினார். இந்த நிகழ்வை அடுத்து, கனடாவில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து புதுடெல்லி “ஆழ்ந்த கவலை” கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

உரிய பாதுகாப்பு வழங்க கனேடிய அரசு அமைப்புகள் முன்வராததால் இந்த மாதம் திட்டமிடப்பட்ட சில தூதரக நிகழ்வுகளை ரத்து செய்வதாக டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.



Read More

Previous Post

‘ஸ்டூடன்ட் விரைவு விசா’ முறையை நிறுத்தியது கனடா – இந்திய மாணவர்கள் பாதிப்பு  | Canada Discontinues Popular Student Visa Scheme

Next Post

3R சிக்கல்களில் தெளிவான சட்டங்கள் தேவை – பாஸ் இளைஞர் தலைவர் – Malaysiakini

Next Post
3R சிக்கல்களில் தெளிவான சட்டங்கள் தேவை – பாஸ் இளைஞர் தலைவர் – Malaysiakini

3R சிக்கல்களில் தெளிவான சட்டங்கள் தேவை – பாஸ் இளைஞர் தலைவர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin