Last Updated:
கனடாவின் டொராண்டோவில் இந்திய மாணவர் சிவாங்க் அவஸ்தி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 20 வயதான சிவாங்க் அவஸ்தி கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவரைப் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிவாங்கின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய துணை தூதரகம், சிவாங்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த மாணவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொடுக்க காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் டொராண்டோவில் இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஹிமான்ஷி குரானா கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்; தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தி


