சிங்கப்பூரில் உள்ள Tampines இல் கந்து வட்டிக்காரரிடம் கத்தியைக் காட்டி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ஜூன் 3-ஆம் தேதி மதிய வேளையில் Tampines central 1- இல் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மதியம் சுமார் 2.10 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
காவல்துறை விசாரணையை மேற்கொண்டது. அந்த நபர் முகமூடி, தொப்பி அணிந்திருந்ததாகவும், கையில் கத்தி ஒன்றை வைத்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பாதிக்கப்பட்டவரிடம் பணத்தை பையில் போடுமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

