Last Updated:
பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உயிரிழந்ததாகப் பரவிய தகவல்களை அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தாரில் இந்தியர்கள் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திகளுக்கு இந்தியத் தூதரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாடு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களால் தோஹாவில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவின. ஆனால், இதுவரை இந்திய உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதே சமயம், வான்வழிப் போக்குவரத்து முடக்கம் மற்றும் உணவுப் பற்றாக்குறை அச்சத்தால் கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
Mar 09, 2026 10:32 PM IST
கத்தார் மீதான தாக்குதலில் இந்தியர்கள் பலியா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியத் தூதரகம்!


