[ad_1]
கத்தார் தோஹாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தேவையற்ற பயணம், கூட்டம் நெரிசலான பகுதிகளைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் சிங்கப்பூரர்களுக்கு அது அறிவுறுத்தியுள்ளது.
உட்லண்ட்ஸில் லாரியுடன் சட்டவிரோத வேலை… இந்திய ஆடவரை மடக்கி பிடித்த சுங்கத்துறை
கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து குறிப்பிட்ட MFA மேற்கண்ட அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அவசரகால நிலை ஏற்பட்டால், https://eregister.mfa.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்துகொள்ளுமாறும் அது கேட்டுக்கொண்டது.
ஆலோசனை அல்லது ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் சிங்கப்பூரர்கள் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தோஹாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்: +974 4412 8082 / 3 அல்லது அலுவலக நேரத்திற்குப் பிறகு தொடர்பு எண்: +974 5548 8608
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம்: +65 6379 8800 அல்லது +65 6379 8855
சிராங்கூனில் லாரி காருடன் மோதல்.. மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர் கைது