• Login
Sunday, July 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கத்தாரின் தந்தை மறைவு.. முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார் | Qatar’s former Emir Sheikh Hamad bin Khalifa Al Thani dies at 74

GenevaTimes by GenevaTimes
July 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கத்தாரின் தந்தை மறைவு.. முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார் | Qatar’s former Emir Sheikh Hamad bin Khalifa Al Thani dies at 74
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Sunday, July 12, 2026, 12:39 [IST]

தோஹா: கத்தார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று காலமானார். அவருக்கு வயது 74. கத்தாரின் தந்தை என்று அழைக்கப்பட்டு வந்த இவரது மரணத்துக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

qatars-former-emir-sheikh-hamad-bin-khalifa-al-thani-dies-at-74

கத்தார் நாட்டின் தலைவரை அமீர் என்று அழைக்கிறார். அமீர் என்றால் மன்னர் என்றும் பொருள்படும். கத்தாரை எடுத்து கொண்டால் ‘அமீர்’ஆக இருப்பவர் தான் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்.

அந்த வகையில் கத்தார் நாட்டின் அமீராக கடந்த 1993ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை செயல்பட்டவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று மறைந்துள்ளார்.

இவரது மரணத்தை கத்தார் அரசு உறுதி செய்துள்ளது. கத்தார் அமீரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான ‘அமீரி திவான்’ உறுதி செய்துள்ளது. இதுதெடார்பாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இன்று காலை தந்தை அமீர் என்று போற்றப்படும் மரியாதைக்குரிய ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைந்தார். அவரது மறைவால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்புக்கு ‘அமீரி திவான்’ ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்துகிறது” என கூறப்பட்டுள்ளது.

கத்தாரின் அமீராக ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி பதவி வகித்தபோது நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக அந்த நாட்டை எண்ணெய் வளமிக்க நாடாக மாற்றியதில் முக்கிய பங்காற்றினார். இவரது தலைமையின் கீழ் நாடு பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்டவற்றில் மேம்பட்டது. குறிப்பாக இவரது பதவிக்காலத்தில் தான் அதாவது 1996ம் ஆண்டில் Al Jazeera எனும் சர்வதேச செய்தி நிறுவனம் தொடங்கப்பட்டது.

2004ம் ஆண்டில் கத்தாரின் முதல் நிரந்தர அரசியலமைப்பு (Qatar first Permanent Constitution) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. கத்தாரின் நகராட்சி தேர்தல்கள் (Municipal Election) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதோடு, தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் தான் ‘கத்தாரின் தந்தை’ என்று ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.

அதன்பிறகு கடந்த 2013ம் ஆண்டில் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி தனது அமீர் பதவியில் இருந்து விலகினார். அந்த பொறுப்பில் தனது 33 வயது மகன் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் வழங்கினார். ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தான் கத்தார் நாட்டின் அமீராக இருந்து நாட்டை வழிநடத்தி வருகிறார். கத்தார் நாட்டிற்கும், நம் நாட்டிற்கும் இடையே நல்ல நெருக்கமான உறவு உள்ளது. கச்சா எண்ணெய், கேஸ் உள்ளிட்டவற்றை நமக்கு கத்தார் வழங்கி வருகிறது. இந்த உறவுக்கு தற்போது மறைந்த ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியும் முக்கிய காரணமாகும்.

English summary

Former Emir of Qatar, Sheikh Hamad bin Khalifa Al Thani, passed away today at the age of 74. World leaders are expressing their condolences over the death of the man known as the “Father of Qatar.”

Read More

Previous Post

விசேட தேவையுடைய பல்கலை மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

Next Post

பாடகி எஸ்.ஜானகி காலமானார்; அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post
பாடகி எஸ்.ஜானகி காலமானார்; அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு – Sri Lanka Tamil News

பாடகி எஸ்.ஜானகி காலமானார்; அரச மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin