லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் தேஹட் மாவட்டத்தில் உள்ள அங்கத்பூர் பகுதியை சேர்ந்தவர் மம்தா சிங். இவரது மகன் பிரதீப் சிங்(வயது 25). மம்தா சிங்கின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு மம்தா சிங்கிற்கு மயங்க் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
ஆனால் இது மம்தாவின் மகன் பிரதீப்பிற்கு பிடிக்கவில்லை. எனவே, மயங்க் உடனான உறவை துண்டித்துவிடுமாறு தனது தாயிடம் பிரதீப் கூறி வந்துள்ளார். இருப்பினும் மம்தா சிங் தனது காதலை விடவில்லை. அதே சமயம், மம்தா சிங் தனது மகன் பிரதீப்பின் பெயரில் சுமார் 1 கோடி மதிப்பிலான 4 இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக்கொண்டு, தனது காதலையும் தொடர்வதற்கு ஒரே வழி தன்னுடைய மகனை கொலை செய்வதுதான் என்று மம்தா முடிவு செய்தார். இந்த திட்டத்தை தனது கள்ளக்காதலனிடம் கூறினார். இதையடுத்து மம்தா, மயங்க் மற்றும் மயங்க்கின் சகோதரர் ரிஷி ஆகிய மூவரும் சேர்ந்து கொலை திட்டத்தை அரங்கேற்றினர்.
இதன்படி சம்பவத்தன்று மம்தா தனது மகனை இரவு உணவு சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து பிரதீப் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, வழியில் அவரை இடைமறித்து மயங்க் மற்றும் அவரது சகோதரர் ரிஷி ஆகிய இருவரும் பிரதீப்பை சுத்தியலால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை நெடுஞ்சாலை அருகே போட்டுவிட்டு விபத்து போல் சித்தரிக்க முயன்றனர்.
ஆனால் போலீசார் பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தியபோது அவரது உடலில் இருந்த காயங்கள், எலும்பு முறிவுகளை வைத்து பிரதீப் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மயங்க் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை சம்பவம் நடந்தபோது பிரதீப்பின் தாயும் சம்பவ இடத்தில்தான் இருந்தார் என்றும், அவர்தான் கொலைக்கு மூலக்காரணமாக இருந்து திட்டங்களை தீட்டினார் என்றும் வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி ரிஷி, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது அவரை போலீசார் காலில் சுட்டு மடக்கிப் பிடித்தனர். இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான மம்தா சிங் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
The post கண்ணை மறைத்த இன்சூரன்ஸ் பணம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து 25 வயது மகனை திட்டமிட்டு கொன்ற தாய் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

