Last Updated:
கடந்த ஆறு வாரங்களில் மட்டும் கல்லூரி முதல்வர், ஆசிரியர் உள்பட 20 பேரை பாரபட்சமின்றி கடித்ததாகவும் தெரிகிறது.
ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து 20 பேரை அணில் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏரானமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்தில் சுற்றித் திரிந்த அணில் ஒன்று கடந்த சில நாட்களாக அவ்வழியே செல்வோரை கடித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியானது. அதன்படி கடந்த ஆறு வாரங்களில் மட்டும் கல்லூரி முதல்வர், ஆசிரியர் உள்பட 20 பேரை பாரபட்சமின்றி கடித்ததாகவும் தெரிகிறது.
Mohanlal Sukhadia University: Squirrel’s Reign of Terror. A squirrel has been creating chaos at the Arts College of Mohanlal Sukhadia University in Rajasthan.
So far, it has bitten 18 to 20 students and staff members. The rescue team has been sweating it out trying to catch the… pic.twitter.com/cSxvM8lttb
— AnuPAma (@IAnupamaa) May 1, 2026
மேலும் கல்லூரி வளாகத்தில் கூடு அமைத்துள்ள அணில், அந்த வழியாக செல்பவர்களால் தனது கூட்டுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணத்தில் கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் அணில் கடித்து வருகிறது. எனவே அந்த அணிலை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் அணிலின் அட்டகாசத்தால் மாணவர்கள், பேராசிரியர்கள் பதற்றமடைந்துள்ளனர்.


