• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. இரவோடு இரவாக நடுக்கடலில் சரிந்த எண்ணெய் ரிக்.. இந்தியர் பலி | Gabon Oil Rig Sinks: Indian Worker Dies, 4 Missing in Offshore Accident, govt orders investigation

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. இரவோடு இரவாக நடுக்கடலில் சரிந்த எண்ணெய் ரிக்.. இந்தியர் பலி | Gabon Oil Rig Sinks: Indian Worker Dies, 4 Missing in Offshore Accident, govt orders investigation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Published: Tuesday, October 27, 2026, 9:49 [IST]

காபோன்: ஆப்பிரிக்க நாடான காபோனுக்கு சொந்தமான பகுதியில் ‘ப்ராஸ்பெக்டர் 5’ என்ற ரிக்கில் ஏற்பட்ட விபத்தில் அது இரவோடு இரவாக மூழ்கியது. இந்த விபத்தில் ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கச்சா எண்ணெய் எடுப்பதில் துளையிடும் கருவிகள் அதாவது ரிக் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை பூமியின் நிலப்பரப்பிற்கு அடியிலோ அல்லது கடலுக்கு அடியிலோ உள்ள பாறை அடுக்குகளை ஆழமாகத் துளையிட்டு, அங்கு தேங்கியிருக்கும் கச்சா எண்ணெய்யைக் கண்டறிந்து வெளியே எடுக்க பயன்படும் பிரம்மாண்டமான இயந்திர அமைப்புகளாகும்.

Gabon Oil Rig Sinks india Africa

விபத்து

அப்படி மேற்கு ஆப்பிரிக்க நாடான காபோன் கடற்கரைக்கு அருகே.. எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ‘ப்ராஸ்பெக்டர் 5’ என்ற ரிக் சமீபத்தில் இரவோடு இரவாக கடலில் மூழ்கியது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். அந்த ரிக்கில் மொத்தம் 115 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக 5 பேர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. அதில் இந்தியர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மாயமான மற்ற 4 பேரில் 3 பேர் காபோன் நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக கபோன் அரசு தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது

ப்ராஸ்பெக்டர் 5 ரிக், எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் போர்ர் டிரில்லிங் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. காபோன் கடல் பகுதியில் BW எனர்ஜி நிறுவனத்தின் துளையிடும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இந்த ரிக் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், துளையிடும் பணி தொடங்குவதற்கு முன்பே எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது.

ரிக் மூழ்கியதற்கான காரணம் குறித்து போர்ர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில் ‘ப்ரீலோட்’ எனப்படும் தயாரிப்பு நடவடிக்கையின்போது அடித்தளத்தில் எதிர்பாராத விதமாக சரிவு ஏற்பட்டதாகவும், இதனால் ரிக்கின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டு அது கடலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 9.40 மணியளவில், காபோன் கடற்கரையில் உள்ள டுசாஃபு மரின் பகுதியில், மபோமோன்ட் உற்பத்தி நிலையத்துக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக அந்நாட்டு பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Offshore drilling rig in Gabon sinking as one of the supporting legs punched through the seabed. 110 of 115 people accounted for. 8 million gone. https://t.co/BVdf4YNVxz

— bu/ac (@buperac) October 26, 2026

விசாரணைக்கு உத்தரவு

விபத்தை தொடர்ந்து காபோன் அரசு அவசரக்கால நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. கடற்படையின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் க்ளோட்டேர் கொண்ட்ஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போர்ர் டிரில்லிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி புருனோ கூறுகையில், “காணாமல் போனவர்களின் நிலை குறித்தும், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைத்தும் கவலையடைந்துள்ளோம். அவர்களை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது முன்னுரிமையாக இருக்கிறது. பணியாளர்களின் நலனை உறுதி செய்யவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

பணிகள் நிறுத்தம்

இதற்கிடையே விபத்தை தொடர்ந்து உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பனோரோ எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிக் விபத்து ஏற்பட்டிருந்தாலும் கூட கடலில் மாசு எதுவும் ஏற்படவில்லையாம். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை மற்றும் அருகிலுள்ள மயோம்பா தேசிய பூங்காவை பாதுகாக்க மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

English summary

An offshore drilling rig named Prospector 5 sank off the coast of Gabon, killing an Indian worker(ஆப்பிரிக்கா ஆயில் ரிக் விபத்து): Gabon Oil Rig Sinks latest news in tamil.

Read More

Previous Post

பொலிஸ் காவலில் இளைஞர் மரணம் ; விசாரணைக்கு உத்தரவு

Next Post

கூட்டுறவு அங்காடிகளில் ரூ.30-க்கு சன்ன ரக அரிசி! கள்ளச்சந்தை விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு! | Tamil Nadu Government Sells Fine Rice at Rs.30 per Kg in Cooperative outlets

Next Post
கூட்டுறவு அங்காடிகளில் ரூ.30-க்கு சன்ன ரக அரிசி! கள்ளச்சந்தை விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு! | Tamil Nadu Government Sells Fine Rice at Rs.30 per Kg in Cooperative outlets

கூட்டுறவு அங்காடிகளில் ரூ.30-க்கு சன்ன ரக அரிசி! கள்ளச்சந்தை விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு! | Tamil Nadu Government Sells Fine Rice at Rs.30 per Kg in Cooperative outlets

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin