Last Updated:
வணிகத்துக்காக ஒரு உயிரினத்தை இப்படி அடைத்து வைக்கலாமா என்றும் சில எக்ஸ்ட்ரா யூசர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்
கண்ணாடி பெட்டிக்குள் பாம்புகள் ஊர்ந்து செல்லக்கூடிய உணவகம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உணவகங்கள் விதவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில் பல்வேறு நாடுகளில் பலவிதமான கேளிக்கைகள் உணவகங்களில் வைக்கப்படுகிறது.
சிறுவர்கள் விளையாட பூங்கா, கேளிக்கை விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகள் வாடிக்கையாளர்களை கவர ரெஸ்டாரன்டுகளில் ஏற்படுத்தப்படுகின்றன. தரமான உணவுகளை வழங்குவதுடன் வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அந்த வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் கண்ணாடி பெட்டிக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கிறது. அதனை அங்குள்ள வாடிக்கையாளர்கள் பயத்துடன் பார்த்து ரியாக்ஷன் செய்கிறார்கள்.
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாம்பினையும் உணவகத்தையும் வியந்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
அதே நேரம் வணிகத்துக்காக ஒரு உயிரினத்தை இப்படி அடைத்து வைக்கலாமா என்றும் சில எக்ஸ்ட்ரா யூசர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள். இணையத்தில் கிடைத்த தகவலின் படி இந்த வீடியோவில் உள்ள உணவகம் சிங்கப்பூரில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
June 21, 2025 8:29 PM IST
கண்ணாடி பெட்டிக்குள் ஊர்ந்து செல்லும் பாம்பு.. வாடிக்கையாளர்களை கவரும் விசித்திர உணவகம்


